2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘எத்தேர்தல் வந்தாலும் களமிறங்கத் தயார்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 18 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ எதனை முதலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டாலும் அந்தத் தேர்தலில் களமிறங்கத் தயார் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

சமகால அரசியல் கள நிலவரங்கள் சம்பந்தமாக தெளிவுபடுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள், ஏறாவூர் நகர மேயர், ஏறாவூர் நகரசபை மு.கா உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இக்கலந்துரையாடலின்போது சமுகமளித்திருந்தனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர், “தற்போதைய அரசியல் இழுபறி தொங்கு நிலைமையின்படி எப்படிப் பார்த்தாலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதே உசிதமானது எனும் முடிவுக்கு சர்ச்சைக்குரிய இரு சாராரும் வரப்போகிறார்கள். அந்த வகையில், கிட்டிய சமீப சில தினங்களில் தேர்தல் களங்கள் சூடுபிடிக்கப் போகின்றன” என்றார்.

அத்துடன், “அதிகாரத்தைப் பெற்று, உரிய இடத்தில் ஆளுமை செலுத்தி, சமூகத்துக்கு முடிந்ததைச் செய்தாக வேண்டும் என்ற நோக்கில், எதிர்வருகின்ற எந்தத் தேர்லிலும் களமிறங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்த அவர், தேசியப் பட்டியல், போனஸ் ஆசனம் என்ற பேச்சுகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளமாக இருக்கின்ற ஒரேயொரு களம் ஏறாவூர்தான் என்று சுட்டிக்காட்டிய அவர், “இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள், மு.காவின் தளத்தை உறுதிப்படுத்தி, அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .