2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எதிர்க்கட்சி தலைவரின் வீட்டின் முன் பணத்தை வீசிய மாணவர்கள்

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா, எம்.றொசாந்த்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில், கிழக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டின் முன்னால் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.

கடந்த மே மாதம் 18 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாண சபையினால் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வுக்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500 ரூபாய் பணம் அறவீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை என கூறிய எதிர்க்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.

ஆனாலும் அந்த பணத்தையும் சேர்த்தே, நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தவராசாவுக்கு வழங்குவதுக்காக ஒரு ரூபாய் வீதம் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட பணத்தை கொண்டு இன்று (12) காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர். எனினும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

இதன் பின்னர் முதலமைச்சரிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது, அவைத்தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர்,

மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் அப்பணத்தை பொட்டலமாக கட்டிய மாணவர்கள் ‘பாவப்பட்ட பணம்’ என எழுதி எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் வீட்டுக்கு முன்னால் எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் இன்றைய மாகாணசபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .