2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன’

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

வடமாகாண அபிவிருத்திச் செயற்பாடுகளும் நல்லிணக்கச் செயற்பாடுகளும், மத்திய அரசாங்கத்தால் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, யாழ்ப்பாணத்துக்கு நேற்று (06) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்து கலந்துரையாடியது. அந்தச் சந்திப்பு, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, வடமாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், நல்லிணக்க வேலைத்திட்டங்கள் உட்பட வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவக் கட்டமைப்புகள் குறித்து ஆராயப்பட்டது.

இதேவேளை, மக்களின் ஜனநாயக உரிமைகள், காணாமல் போனோரின் விவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வடமாகாணத்தில் எவ்வளவு எண்ணிக்கையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என, குறித்த குழு கேள்வி எழுப்பியது. அத்துடன், விசேடமாக வடமாகாணத்தில் கல்வி, சுகாதாரம், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

"அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் இயற்கை அனர்த்தங்களின்போதும் மத நிகழ்வுகளின் போதும், இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

"இலங்கையில், புதிய அரசமைப்பு உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

"அத்துடன், வடமாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கம், 15 பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது" என, குறித்த குழுவிடம், ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .