2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலேரியா நுளம்புவகை வவுனியாவில் கண்டுபிடிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேரியா நோயை உண்டாக்கும் பிரதான நுளம்பு வகை, வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நுளம்புகள் இந்தியாவிலேயே அதிகமாகக் காணப்படுவதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமானது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனோபிலெஸ் ஸ்டெபென்ஸி (Anopheles stephensi)எனப்படும் இந்த நுளம்புகள், மன்னார் மாவட்டம், பேசாளையில் உள்ள கிணறு ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், அதனை அண்டிய பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின், பொது சுகாதாரப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் சரத் அமுனுகம கருத்து வெளியிடுகையில்,
"இப்பகுதிகளில் மலேரியா பாதிப்புக்கு உள்ளான நோயாளர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை. எனினும் இவ்வகையான நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகிறது. பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .