Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 19 , பி.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினராசா வெற்றிக் கிண்ணத்துக்கான தொடரில், அரையிறுதிப் போட்டிகளுக்கு, இளவாலை யங்ஹென்றிஸ், ஊரெழு றோயல், வதிரி டயமன்ஸ், துறையூர் ஐயனார் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில், வலிகாமம் லீக்கின் முன்னாள் தலைவரும் தமிழ்மிரரின் வலிகாமம் பிரதேச ஊடகவியலாளருமான, மறைந்த நா.நவரத்தினராசா ஞாபகார்த்தமாக, இச்சுற்றுப் போட்டி, இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.
தலைவர் கிண்ணம் எனும் பெயரில் நடைபெறுகின்ற இச்சுற்றுப் போட்டியில், யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த, தெரிவு செய்யப்பட்ட 10 அணிகள் பங்குபற்றுகின்றன.
இதில், யங்ஹென்றிஸ் அணிக்கும் புங்குடுதீவு சண்ஸ்ரார்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற யங்ஹென்றிஸ் அணி, தனது காலிறுதிப் போட்டியில், கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியை, 5-0 என்ற கோல் கணக்கில் வென்று, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
வதிரி டயமன்ஸ் அணிக்கும் அராலி பாரதி அணிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில், 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற வதிரி டயமன்ஸ் அணி, தனது காலிறுதிப் போட்டியில், பலாலி விண்மீன் அணியை, சமநிலை தவிர்ப்பு உதையில், 5-4 என்ற ரீதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
குருநகர் பாடுமீன் அணிக்கும் வேலணை துறையூர் ஐயனார் அணிக்கும் இடையிலான காலிறுதிப் போட்டியில், துறையூர் ஐயனார் அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
ஊரெழு றோயல் அணிக்கும் மணற்காடு சென். அன்ரனிஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஊரெழு றோயல் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
மேற்படி போட்டிகளைத் தொடர்ந்து, அரையிறுதிப் போட்டிகள், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன. முதலாவது அரையிறுதிப் போட்டியில், இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், வதிரி டயமன்ஸ் அணியை எதிர்த்து வேலணை துறையூர் ஐயனார் அணியும் மோதவுள்ளன.
அரையிறுதிப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. போட்டி நடைபெறும் திகதிகள் தொடர்பில் இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago