2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜீ.எஸ்.பி மீண்டும் கிடைத்ததால் “இலங்கையின் ஆடைத்தொழிற்றுறை வளர்ச்சி கண்டு வருகின்றது”

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

“ஐரோப்பிய ஒன்றியத்தால், இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி வரிச்சலுகை, குறுகியக் காலம் இடைநிறுத்தப்பட்டிருந்ததால், இலங்கையின் ஆடைத்தொழிற்றுறை பாரிய வீழ்ச்சிக் கண்டது. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சியால், ஜீ.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், வீழச்சிக்கண்டிருந்த ஆடைத்தொழிற்றுறை தற்போது வளர்ச்சிக்கண்டு வருகின்றது” என்று, தபால்,தபால்சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

ஆடைத்தொழிற்றுறைக்கான பயிற்சி நிலையமொன்று, அக்குறணையில், இன்றுத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

“முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில், இலங்கையில், ஆடைத்தொழிற்றுறை மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்தது. நாடு முழுவதிழும், அவர் ஆடைத்தொழிற்சாலைகளை ஆரம்பித்தார். அதன்மூலம் பல இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு, தொழல்வாய்ப்பை வழங்கியதுடன், பாரியளவில் வெளிநாட்டு செலாவணியையும் நாட்டுக்குத் தேடிக் கொடுத்தார். எனினும், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், ஜீ.எஸ்.பீ வரிச்சலுகை எமது நாட்டுக்குக் கிடைக்காமல் போனதன் காரணமாக, பல ஆடைத்தொழிற் சாலைகள் மூடப்பட்டன.

“இருந்தபோதும் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட சில முன்னேற்ற நடவடிக்கைகள் காரணாமாக, ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகை மீண்டும் கிடைத்துள்ளது. இதனால், இலங்கையில் ஆடைத்தொழிற்றுறை மீண்டும் வளர்ச்சிக் கண்டு வருகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .