2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆஸி அணியின் பஸ் மீது கல்வீச்சு

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிவரும் அவுஸ்திரேலிய அணி பயணம் செய்த பஸ் மீது, கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது. எனினும், பங்களாதேஷில் காணப்படும் பாதுகாப்பு நிலைமை தொடர்பாகத் திருப்தியுடன் உள்ளதாக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் முதல்நாளில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே, இந்தக் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் பட்டமையின் காரணமாக, பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடி உடைபட்டது என, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்தது. மைதானத்திலிருந்து, வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குச் சென்றுகொண்டிருந்த போதே, இது இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்த, கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு முகாமையாளர் ஷோன் கரோல், பாதுகாப்புத் தொடர்பில் திருப்தியடைவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விடயத்தைப் பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு, பங்களாதேஷ் தரப்பு முயல்கிறது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, சிட்டகொங் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் ஆணையாளர் இக்பால் பஹார், வீதியில் காணப்பட்ட கல்லை, வீதியால் சென்ற வாகனம் மிதித்தமை காரணமாக, அந்தக் கல், பஸ்ஸைத் தாக்கியிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

எனினும், இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம், இலங்கை நேரப்படி திங்கட்கிழமை முன்னிரவு 7 மணிக்கு இடம்பெற்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .