2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

புத்தளம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நிர்க்கதி

Editorial   / 2018 மே 31 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹிரான் பிரியங்கர

பிரபல பால் மா உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு பசும்பாலை விநியோகித்துவரும் புத்தளம் மாவட்ட பால் உற்பத்திளார்கள், கடந்த 2 மாதங்களாக அதற்கான கொடுப்பனவை குறித்த நிறுவனம் வழங்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என, தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் பால் உற்பத்தியை தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,  1,400 பேர் நாளாந்தம் 800 லீற்றர் பசும்பாலை குறித்த நிறுவனத்துக்கு வழங்கி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

பால் சேகரிப்பு நிலையங்களில் கொள்வனவு செய்யப்படும்  பாலுக்கு  15 நாட்களுக்கு ஒரு முறை கொடுப்பனவை குறித்த நிறுவனம் வழங்கி வந்த போதிலும், கடந்த 2 மாதங்கள் முறையாக கொடுப்பனவு வழங்கவில்லை எனவும் இதற்கு பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர் எனவும், பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பால் உற்பத்தியாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

இது எமது வாழ்வாதார தொழில். இதனை நம்பியே வாழ்ந்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படாததால் பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினைகள் எமக்கு ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் குறித்த நிறுவனத்துடன்  தொலைபேசி ஊடாக தொடர்புக்  கொள்ள முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .