2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அங்கருக்குடன் உங்கள் இலட்சியத்தை நோக்கிய முதல் அடியை எடுத்து வையுங்கள்

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி என்பது உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதன் பெற்றோர் கொடுக்க விரும்பும் உன்னத பரிசாகும். ஒரு பிள்ளையின் கல்விக்காக தம் சொத்துக்களையே இழக்கத் தயாராகும் பெற்றோர்களை நாம் கண்கூடாக கண்டுள்ளோம். ஒவ்வொரு பெற்றோருக்கும் தம் பிள்ளை தன் இலட்சியத்தை அடையும் ஆனந்தத்தை காண்பதை தவிர வேறெந்த பெருமையும் இருக்க முடியாது.

பெற்றோரின் உள்ளத்தை நன்கறிந்த அங்கர், மாணவர்கள் அவர்களின் இலட்சியங்களை எட்டுவதற்கு உதவும் விதமாக 'இலட்சியப் பயணம்' எனும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

எதிர்கால மாணவ சந்ததியின் கனவுகளை நனவாக்கி, அவர்களது இலட்சியங்களை அடைவதற்கான வழிகாட்டலை வழங்கும், அங்கரின் இந்த உன்னதச் செயற்றிட்டம் வடக்கில் 3 மாதங்களுக்கும் கிழக்கில் 3 மாதங்களுக்கும் என மொத்தமாக 6 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுடன் ஒன்றிணைந்து நடத்தப்படவுள்ள இந்த நிகழ்வில், கல்வியின் முக்கியத்தும், வெற்றிக்கான வழிகள் போன்ற முக்கியமான விடயங்கள் பிரபல சொற்பொழிவாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் வாயிலாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். அத்தோடு கல்வித்திறனை அதிகரிக்கக்கூடிய பல தனித்துவமான பயிற்சி செயற்பாடுகளும் நடைபெறவுள்ளன, உதாரணமாக மன வரைபு (மைன்ட் மேப்பிங்) போன்ற மாணவர்களின் மூளைக்கு வேலை தரும் செயற்பாடுகள் நடைபெறவுள்ளன. மன வரைபானது, வரைகலை வழிகளினூடாக கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஓர் முறையாகும். இது தகவல்களை சிறப்பான முறையில் கட்டமைப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், கிரகித்துக் கொள்வதற்கும், ஒன்றிணைப்பதற்கும், நினைவு கூர்வதற்கும் மூளையை சிறப்பான முறையில் பயிற்றுவிக்கும் ஓர் உன்னத செயற்பாடாகும்.

இது மாணவர்களது, பாட புத்தகங்களிலிருந்து குறிப்புக்களை துல்லியமான முறையில் எடுப்பதற்கும், கட்டுரைகள் அமைப்பதற்கும் மிகவும் வசதியாய் இருக்கின்றது. வர்ணங்கள், உருவங்கள் மற்றும் குறிச்சொற்கள் போன்றவற்றை கொண்டு செயற்படும் நினைவு வரைபானது மாணவர்களின் நினைவாற்றலை அதிகரித்து, பரீட்சைகளின் போது, சிறப்பாய் செயற்பட கைக்கொடுக்கின்றது.

இவ்வாறு பல பயன்தரு செயற்றிட்டங்களை உள்ளடக்கிய இலட்சிய பயணத்தின் முதற்கட்ட செயற்றிட்ட நிகழ்வுகள் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

உள்ளத்தில் எதிர்கால இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற உறுதியோடும் ஆர்வத்தோடும் வரும் அனைவரையும் அங்கர் அன்போடு மட்டுமல்லாமல் இலவசமாகவும் வரவேற்கின்றது. வாருங்கள் உங்கள் இலட்சிய பயணத்தின் முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள். உங்கள் பயணத்தின் வழிதுணையாய் எப்போதும் நாம் உங்களோடு இருப்போம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .