2021 மே 12, புதன்கிழமை

'அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

நல்லாட்சியில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் சிறந்த ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு, வட்டக்கச்சியில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இதனை முன்னெடுக்கும் ஒரு நிகழ்வாக இதனை நாம் இங்கு ஆரம்பித்து வைத்துள்ளோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்துக்கு இணையாக அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமுனை விவசாய கல்லூரியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இத்திட்டத்தின் மூலம் எமது பிரதேச விவசாயிகளையும் வீட்டுத்தோட்டம் செய்யும் குடும்ப அங்கவர்களையும் ஆர்வப்படுத்தி அவர்கள் சுயமாக உருவாக்கம் செய்யும் சேதனப் பசளையின் மூலம் செய்கின்ற விவசாயத்தில் கிடைக்கின்ற காய்கறிகளை உண்ணுவதனால் எமது உடலையும் எமக்கு ஏற்படக்கூடிய நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம்.

இன்று சந்தைக்கு வருகின்ற மரக்கறி வகைகள் ஏதோ ஒரு வகையில் இரசாயனம் கலக்கப்பட்ட பசளையின் மூலம் உருவாக்கம் செய்து அதனால் கிடைக்கப்பெற்ற காய்கறிகளே அதிகம் சந்தைக்கு வருகின்றது.

அதுமாத்திரமல்லாமல்,காலத்துக்கு ஏற்றாப்போல் காய்கறிகளை பிஞ்சு பருவத்தில் அறுவடை செய்து அதற்கு இரசாயனப் பதார்த்தங்களை பாவித்து மக்களின் பாவனைக்கு விடுகின்றனர். இதை அறிந்தும் நாம் அதை கொள்வனவு செய்து சமையல் செய்து உண்ணுகின்றோம்.

இதனை தடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்துக்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும்.

அதுமாத்திரமல்லாமல் எமது பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம சேகவர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய குழு சங்கள் மற்றும் விவசாய கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இணைந்து எமது பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கும் வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கும் இவ்விடயம் தொடர்பில் மிகத் தெளிவான விளக்கத்தினை வழங்கி வந்தால் இத்திட்டத்தை இன்னும் இன்னும் முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கும்.

அதற்கான முயற்சிகளை வெளிக்கள உத்தியோகத்தர்கள் முன்னின்று உழைக்வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக உயரதிகாரிகள் தேவையான ஊக்குவிப்புக்களை வழங்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .