2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

2016ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதிஅமைச்சர் டொக்டர். திருமதி. அனோமா கமகே முன்னெடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆராயும் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைச்சர் அனோமா கமகேயின் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர்  துசித்த பி. வணிகசிங்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், திவிநெகும உதவி ஆணையாளர் அனுருத்த பியதாச உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பிரதிஅமைச்சர் திருமதி டொக்டர் அனோமா கமகே,

பல ஆண்டுகளாக, தேசிய மகளிர் தினம் நிகழ்வுகளை அம்பாறை மாவட்டத்தில் நடத்த வேண்டும் எனும் எண்ணம் தனக்கு இருந்ததாகவும் அது இம்முறை நிறைவேறியுள்ளதாகவும்  கூறினார்.

இதன் மூலம்,பெண்களை பொருளாதார மற்றும் சமூக மாவட்டத்தில் மேம்பாட்டுத்தவும் அவர்களை அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்பு செய்ய ஊக்கமளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் உகனை அம்பாறை, தமன, அம்பாறை, இறக்காமம், மருதமுனை, ஆலையடிவேம்பு. சாய்ந்தமருது  பிரதேசங்களின் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .