2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இளைஞன் மீது தாக்குதல்: நால்வர் கைது

Sudharshini   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

இளைஞன் மீது தாக்குதல் நடத்திய நான்கு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (18) மாலை கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நான்கு இளைஞர்;களும் இன்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்;செய்யப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்;.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தைச் சேர்;ந்த முஹம்மட் நஸார்;த்தீன் முஹம்மட் றிப்கி என்ற 19 வயது இளைஞன்,  அட்டாளைச்சேனையில் தங்கியிருக்கும் தனது தந்தையை சந்திப்பதற்காக கடந்த 10ஆம் திகதி இரவு 8 மணியளவில் ஒலுவிலிலிருந்து அட்டாளைச்சேனைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

இதன்போது பாலமுனை பிரதேசத்தில் வைத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேற்படி இளைஞனை இடைமறித்து அலைபேசியை கேட்டுள்ளனர். அலைபேசியை கொடுக்க மறுத்ததையடுத்து, அலைபேசியை அபகரித்துக்கொண்டு தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, நான்கு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .