2020 நவம்பர் 25, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 02 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

368 கிராம்  கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும்  மேலதிக மாவட்ட நீதவானுமான  நளினி கந்தசாமி, இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சின்னமுகத்துவாரப் பகுதியிலுள்ள சந்தேக நபரின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டபோது, 368 கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது. இதனைத் தொட்ர்ந்து சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .