2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

கல்முனை நகர அபிவிருத்தி வேலை 15இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஸினாஸ்,எஸ்.எல். அப்துல் அஸீஸ்

கல்முனை நகர அபிவிருத்திக்கான வேலை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் 500 மில்லியன் ரூபாயை 04 மாதகாலத்துக்குள் பயன்படுத்தி அபிவிருத்தி வேலையை முன்னெடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மாநகர சபையில் திங்கட்கிழமை (11) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இந்த அபிவிருத்தி வேலையை முன்னெடுப்பதற்காக கல்முனை மாநகர சபையின் ஆளணி, முகாமைத்துவ வசதி போதாவிட்டால் நகர அபிவிருத்தி அமைச்சிலிருந்து தேவையான உதவியைப் பெறமுடியும் எனவும் அவர் கூறினார்.
இனிமேல் கல்முனை மாநகர சபையால் 02 அல்லது 03 நாட்களுக்கு திண்மக்கழிவு அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .