2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார அமைச்சு அம்பாறைக்கே வழங்க வேண்டும் :கலீல்

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அம்பாறை மாவட்டத்துக்கே வழங்க வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.கலீல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

எப்போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இதயம் என்று கூறப்படும் அம்பாறை மாவட்டத்துக்கு இரு முறை அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் வழங்கப்பட்டு வந்துள்ளதை இவ்விடத்தில் கூறியாக வேண்டும்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இவரின் சுகாதார அமைச்சருக்கான வெற்றிடம் அம்பாறை மாவட்டத்துக்கே வழங்கப்பட வேண்டும்.

ஏனெனில் மாகாண சபை அமைச்சில் ஓர் அமைச்சு மட்டுமே அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. இதை இம்மாவட்ட மக்கள் ஒரு போதும் விட்டுக்  கொடுக்க மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .