2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை மின்சார சபையின் திருத்த வேலை காரணமாக கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்முனை மின் பொறியியலாளர் எம். பர்ஹான், சனிக்கிழமை தெரிவித்தார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ஆம் திகதி அம்பாறை பொறியியலாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட இறக்காமம், தீகவாபி மற்றும் குடிவில் ஆகிய பிரதேசங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணிவரை மின் துண்டிப்பு அமுலில் இருக்கும்.

கல்முனை மின் பொறியியலாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சாய்ந்தமருது, தைக்கா வீதி மற்றும் அதனோடு இணைந்த குறுக்கு வீதிகளிலும் 12ஆம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் துண்டிப்பு அமுலில் இருக்கும்.

இதேவேளை நாளை மறுதினம் (11) திங்கட்கிழமை இங்கினியாகல மின் பாவனை சேவை நிலையத்துக்குட்பட்ட சியம்பலான்டுவ நகர், மகாகலுகொல்ல, புத்திரிகாய, அலமுல்ல, கலுகொல்லாய ஆகிய பிரதேசங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் துண்டிப்பு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .