2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

'கல்முனை மேயரின் பதவியேற்பு நிகழ்வில் மதகுருமாருக்கு உரிய இடமில்லை'

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை மாநகர சபையின் புதிய மேயரின் பதவியேற்பு வைபவத்தில் மதகுருமாருக்கு உரிய இடமும், மரியாதையும் வழங்கப்படவில்லை என கல்முனை சுமத்ரா ராம விகாராதிபதி சங்கைக்குரிய சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் புதிய மேயர் மீராசாஹிப் சிராஷ் தனது கடமைகளை இன்று புதன்கிழமை காலை மேயர் காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொள்வதையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சங்கைக்குரிய விகாராதிபதி மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

இதேவேளை, புதிய மேயர் இன்றைய பதவியேற்பு வைபவத்தின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு தேசியக்கொடியினை ஏற்றிக் கொண்டிருந்த வேளை, கம்பத்திலிருந்து தேசியக்கொடி கீழே விழுந்தமையானது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியினையும், முகச் சுளிப்பினையும் ஏற்படுத்தியது.

இது இவ்வாறிருக்க, புதிய மேயரின் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான எழுத்து மூல முறையான அழைப்புகள் எவையும் ஊடகவியலாளர்கள் எவருக்கும் மாநகரசபை நிருவாகத்தினரால் விடுக்கப்படவில்லை என இப் பிரதேச ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களிலும் கல்முனை மாநகரசபையின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு ஊடகவியலாளர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் இப்பிரதேச ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0

 • Maruthoor. A.R.M Saturday, 22 October 2011 08:04 PM

  இதெல்லாம் வயித்தெரிச்சல்ல ....வரத்தான் செய்யும் ... என்ன செய்யலாம் ...... மேயருக்கு வாழ்த்துக்கள் ..

  Reply : 0       0

  neethan Wednesday, 19 October 2011 11:19 PM

  பிள்ளையார் சுழி போடும்போதே பிரச்சினையா? மத குருமாருக்கு உரிய இடம் இல்லை, தேசிய கொடி கீழே விழுந்தமை, ஊடகவியலாளர்கள் முறையாக அழைக்கப்படாமை, இவற்றுக்கு பொறுப்பு கூறுவது நேற்று முன்தினம் பதவியேற்ற ஆணையாளரா? அல்லது பிரதேச செயலாளரா?

  Reply : 0       0

  safa Wednesday, 19 October 2011 11:31 PM

  மிக சிறப்பான காரியம் செய்த வைபவத்துக்கு என்னால் கலந்து கொள்ளமுடியாவிட்டாலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  hameed Thursday, 20 October 2011 08:15 AM

  இதைத்தான் சிறு பிள்ளை செய்யும் வேளாண்மை விளைந்தும் விடுபோய் சேராது என்பது....

  Reply : 0       0

  maazeen Thursday, 20 October 2011 04:02 PM

  இது எல்லாம் பிரச்சினை இல்லை

  Reply : 0       0

  uooran Thursday, 20 October 2011 06:52 PM

  முஸ்லிம் காங்கிரசின் தாயகம் கல்முனையில்இ முஸ்லிம் காங்கிரஸ் சார்பான மேயர் பதவியேற்பு நிகழ்வில் அந்தக்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களையே காணமுடியவில்லை. குட்டியாடு குடலேரக்கொளுத்தலும் வழுக்கள்இ வழுக்கள்தான் என்ற பழமொழியை நினைவுட்டியது.
  மேயரே அவசரப்படாது பொதுவாக சிந்திப்பவர்களின் கதைகளைகேட்டு செயற்படுங்கள். எல்லா உறுப்பினர்களையும் கலந்தாலோசித்துஇ விசேடமாக உங்களது கட்சியை கந்தலோசித்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கட்சியுடையது என பார்ப்பர்.

  Reply : 0       0

  birdeye Saturday, 22 October 2011 03:18 AM

  May be this would be these symptoms of feature status of MC!! be alert, otherwise it record worse history in the country................

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .