2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

அம்பாறை கரையோரப் பகுதிகளில் பலத்த மழை; வெள்ளத்தால் பொதுமக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று காலை காற்றுடன் பெய்த மழை காரணமாக, வீதிகளும், குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக - அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி போன்ற பகுதிகளில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆயினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களுக்கு இதுவரை அதிகாரிகள் எவரும் சென்று பார்வையிடவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாவட்டத்தில் வடிகான்கள் நிர்மாணிக்கப்படாத பிரதான வீதியோரங்களில் மழை நீர் தேங்கி வருவதைக் காண முடிகின்றது. இதனால், நோய்கள் பரவுவதற்கான ஏதுநிலைகள் தீவிரமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை, ஒலுவில், அட்டப்பள்ளம் மற்றும் நிந்தவூர் போன்ற பகுதிகளிலுள்ள பல விவசாய நிலங்களிலுள்ள சிறு பருவ நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன.

தமது விவசாய நிலங்களிலுள்ள நெற் பயிர்கள் இவ்வாறு - தொடர்ந்தும் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுமாயின் தாம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்தும் இப்பகுதியில் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • uooran Friday, 25 November 2011 02:23 PM

  கடுமையாக பெய்யும் கன மழை காரணமாக பொது மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளி சின்னப்பலத்தின் மேலாக வெள்ளம் பாய்ந்து செல்கின்றத்து.
  இன்று காலை அலுவலகங்களுக்கு செல்வோரும் பரீட்சைக்காக பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் அவஸ்த்தை படுவதை காணமுடிகிறது.
  கல்முனை பஸ் டிப்போவில் இருந்து அம்பாறை நோக்கி பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை. பலருக்கு தொழிலுக்கு செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

  Reply : 0       0

  ameerudeeen Friday, 25 November 2011 06:25 PM

  என்னப்பா செய்ய? இங்கும் அதே நிலைதான்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X