2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

நல்லாட்சி தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

நல்லாட்சி தொடர்பான செயலமர்வு நேற்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இச் செயலமர்வு, தகவல் வள முகாமைத்துவ நிலையத்தினால் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்டது.

ஜி.ஐ.இஸட். ஜேர்மன் அமைப்பின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் இவ்வேலைத் திட்டமானது உள்ளூராட்சி நிறுவனங்களின் நல்லாட்சி நடவடிக்கைகளை மேன்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்திட்டத்தின் இணைப்பாளரான டீ.கே.செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக ஜே.எஸ்.புஸ்பலதா, பீ.தர்சிணி ஆகியோர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .