2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

கிணறுகள், மலசலகூடங்கள் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.ரி.சகாதேவராஜா


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களில் மலசலகூடங்களும் பொதுக்கிணறுகளும் அமைப்பதற்கான நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. 

இந்த இரண்டு கிராமங்களிலும் 39 மலசலகூடங்களும் 09 பொதுக்கிணறுகளும் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக 40 இலட்சம் ரூபா புனர்வாழ்வு அமைச்சால் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களில் 39 மலசலகூடங்களை அமைப்பதற்கான நிதியுதவி உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு 20,000 ரூபா காசோலையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கண.இராசரெத்தினம், கிராம சேவையாளர்கள் வீ.வீரரமணி, எ.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0

  • Shanmukam Wednesday, 31 July 2013 07:12 AM

    நாவிதன்வெளியில் சுருட்டியது போதாது என்று திருகோவிலிலும் வேலையை காட்டதொடங்கி விட்டனர். ஒரு மலசல கூடத்துக்கு கொமிசன்? வண்டவாளம் இன்னும் தொடரும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--