2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

துண்டு பிரசுரங்களை விநியோகித்தவர் கைது

Administrator   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சவளக்கடை பொலிஸ் பிரிவில் தேர்தல் சட்டங்களை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகித்த ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை சவளக்கடை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

சளம்பைக்கேணி, 5ஆம் கொளனியை சேந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஜூம்மா தொழுகைக்கு பின்னர் சவளக்கடை அர்-ரகுமான் ஜூம்மா பள்ளிவாசலுக்கு முன்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
 

கைது செய்யப்பட்ட நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .