2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

21 வருடங்களின் பின் காஞ்சரம்குடா விசேட அதிரடிப்படை முகாம் வாபஸ்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் காஞ்சரம்குடா பிரதேசத்தில் அமைந்திருந்த விசேட அதிரடிப்படையினரின் முகாம் கடந்த 21 வருடங்களின் பின்னர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்றாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.  

கடந்தகாலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு காஞ்சரம்குடா பிரதேசத்தில் இவ் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அம்பாறை மாவட்டத்தில் ஊறனி, சங்கமன்கண்டி, கண்ணகிபுரம், சாகமம் ஆகிய பகுதிகளிலிருந்த நான்கு விசேட அதிரடிப்படை முகாம்கள் முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--