2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

நட்டஈடு வழங்க ஏற்பாடு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையில், வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் வைபவம், எதிர்வரும் சனிக்கிழமை (17)  அம்பாறையில் நடைபெறவுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.

சமூக வலுவூட்டல், ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தலைமையில் நட்டஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாகவும் இதற்கென 15.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடும் வரட்சி காரணமாக, 2018ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 700 ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 364 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களெனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .