2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (05.06.2020) பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்!

Editorial   / 2020 ஜூன் 05 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். 

ரிஷபம்: ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை. 

மிதுனம்: எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். 

கடகம்: விரும்பி பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

சிம்மம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். 

கன்னி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் உண்டாகும். 

துலாம்: உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். 

விருச்சிகம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. 

தனுசு: எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். 

மகரம்: குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. 

கும்பம்: பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். 

மீனம்: குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக் கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--