2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான  அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோர் முன்னிலையிலேயே மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இதன் மூலம்,  கனடாவிலிருந்து அணு யுரேனியம், தொழில்நுட்பம் ஆகியவற்றினை பெற்றுக்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் உதவியளிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்தானமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த இந்தியப்  பிரதமர் மன்மோகன் சிங், கனடாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ‌யுரேனியத்தை, இந்தியா ஒரு போதும் தீய செயற்பாட்டுக்கு  பயன்படுத்தமாட்டாது எனவும்   உறுதியளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--