2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

காஷ்மிரில் 5 ஆயுததாரிகள் சுட்டுக்கொலை

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுததாரிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஐவரை, இந்தியாவின் பாதுகாப்புப் படையினர், காஷ்மிரில் வைத்து, நேற்று முன்தினம் (15) சுட்டுக் கொன்றனர். மூன்று நாள்களில் இடம்பெற்ற, இவ்வாறான மூன்றாவது மிகப்பெரிய சம்பவமாக இது அமைந்தது.

ஆயுததாரிகளின் குழுவொன்று காணப்பட்டதை அறிந்து, அப்பகுதியில் படையினர் அவ்விடத்தைச் சுற்றிவளைத்தனர் எனவும், அதையடுத்து, ஆயுததாரிகள் தப்பிப்பதற்காக, அப்பகுதி மக்கள், படையினர் மீது கற்களை வீசித் தாக்கினர் எனவும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, காஷ்மிரின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள கிராமமொன்றில், படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலொன்றில், போராட்டக்காரர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார் என, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--