2020 நவம்பர் 25, புதன்கிழமை

கிழக்கு அலெப்போவுக்கு 20 ஐ.நா கண்காணிப்பாளர்கள்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் வெளியேற்றத்தை கண்காணிப்பதற்காக, 20 கண்காணிப்பாளர்களை கிழக்கு அலெப்போவுக்கு அனுப்புவதற்கு சிரிய அரசாங்கமும், தரையிலுள்ள ஏனைய தரப்புகளும் இணங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளரொருவர் நேற்று  (20) தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இவ்வாண்டு ஜூலை மாதம் முற்றுகைக்குள் வசிக்கும் அலெப்போ பொதுமக்களுக்குகான மனிதாபிமான உதவி வழங்கலுக்கு அனைத்துத் தரப்புகளும் இணங்குவதற்காக ஐக்கிய நாடுகள் காத்திருக்கிறது.

இதேவேளை, அலெப்போ அகதிகளை சிகிச்சைகளுக்காக இஸ்ரேலிய வைத்தியசாலைகளுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இஸ்ரேல் ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நேற்று (20) தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சிறுவர்களையும், பெண்களையும் ஏற்கத் தயாராகவிருப்பதாக ஜெருசசேலத்தில் வைத்துத் தெரிவித்த நெதன்யாகு, போராளிகள் இல்லாவிட்டால் காயமடைந்த ஆண்களையும் ஏற்கத் தயாராகவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-பாப்பை முற்றுகைக்குள்ளாக்கியுள்ள துருக்கியினால் ஆதரிக்கப்படும் சிரிய எதிரணிப் படைகள், கடும் தரை மற்றும் விமானத் தாக்குதல்களின் உதவியோடு அலெப்போவுடன் தொடர்புபடும் நெடுஞ்சாலையின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாக, துருக்கி இராணுவம் இன்று (21) தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--