2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சிரியா, ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் இட்லிப்பில் தொடருகின்றன

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் இட்லிப், ஹமா மீதான தமது தீவிரமான தாக்குதல்களை ரஷ்ய, சிரிய ஜெட்கள் தொடருவதாக அங்கிருப்போரும் மீட்புப் பணியாளர்களும் நேற்று தெரிவித்துள்ளனர்.

தென் இட்லிப்பிலுள்ள அல்-ஹபீட், அப்டின் கிராமங்களிலும் அப்பகுதியிலுள்ள வேறு கிராமங்களிலும் சிரிய இராணுவ ஹெலிகொப்டர்கள் கொத்தணிக் குண்டுகளை வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அல்-ஹபீட்டில் குறைந்தது 15 ஹெலிகொப்டர்கள் குண்டுகளை வீசியதில், குறைந்தது இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், ஒன்பது பேர் காயமடைந்ததுடன் டசின் கணக்கான கட்டடங்கள் அழிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, வட ஹமா புறநகரிலுள்ள குவாலட் அல் மடிக்கில், அருகிலுள்ள இராணுவ நிலைகள், சோதனைச் சாவடிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்லறி ஷெல் தாக்குதலில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், துருக்கி எல்லைக்கருகிலுள்ள முகாம்களுக்கு அருகிலுள்ள தெற்கு இட்லிப்பிலுள்ள கிராமங்களும் நகரங்களும் கடுமையான தாக்குதல்களால் இலக்கு வைக்கப்படுகையில் அங்கிருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, வட ஹமாவிலுள்ள லடம்னே, கபார் ஸெய்டா நகரங்களை ரஷ்ய ஜெட்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சிரிய யுத்தத்தில் வேறு இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த பெரும்பாலனவர்கள் உள்ளிட்டோர் அடைக்கலம் தேடியுள்ள மூன்று மில்லியனுக்கும் மேலான பொதுமக்களைக் கொண்ட இட்லிப்பிலுள்ள பிரதான நகரத்தை விமானத் தாக்குதல்கள் இன்னும் தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஷ்யாவும் அதன் நட்புறவு நாடுகளும் வைத்தியசாலைகளையும் சிவில் பாதுகாப்பு நிலைகளையும் தாக்கி எதிரணியை சரணடையச் செய்வதற்கான முன்னைய பாரிய இராணுவ மோதல்களின் உத்தியை கையாள்வதாக எதிரணி குற்றஞ்சாட்டுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X