2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சீனாவில் வெள்ளத்தால் 154 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 24 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக குறைந்தது 154 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமல் போயுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர், வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

திடீரென தோன்றிய வெள்ளங்களாலும் நிலச்சரிவாலும் ஹெபெய், ஹெனான் மாகாணங்களே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெபெய் மாகாணத்தில், 114 பேர் கொல்லப்பட்டதுடன், 111 பேர் காணாமல் போயுள்ளதோடு, 53,000 வீடுகள் அழிவடைந்ததாக சிவில் விவகார திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, குறைந்தது 25 பேர் கொல்லப்பட்ட ஸிங்தாய் நகரத்தில், வெள்ளமென அரசாங்கம் அறிவிக்கவில்லையென தெரிவித்து, அரசாங்கத்துக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், மத்திய மாகாணமான ஹெனனில், 15 பேர் கொல்லப்பட்டதுடன், எட்டுப் பேர் காணாமல் போயுள்ளனர். மின்னல் மற்றும் கடுமையான காற்று காரணமாக, 72,000 மக்கள், தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், 18,000 வீடுகள் பாதிப்படைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .