2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

சுவாதி கொலை வழக்கு: பொலிஸ் தடுப்புக் காவலில் ராம்குமார்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணான சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான ராம்குமாரை, மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைப்பதற்கு, 14ஆவது மெட்ரோபொலிட்டன் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புதன்கிழமை மாலையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு மூலம், வெள்ளிக்கிழமை மாலை வரை, தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில், காலையில் 30 நிமிடங்களும் மாலையில் 30 நிமிடங்களும் மாத்திரம், ராம்குமாரின் வழக்குரைஞரான பி. ராம்ராஜ் மாத்திரம், சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் முயன்றபோது, தற்கொலைக்கு அவர் முயன்றிருந்த நிலையில், தடுப்புக் காவல் காலத்தில், அவருக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராம்குமார் சார்பில் ஆஜரான ராம்ராஜ், பொலிஸ் தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டதோடு, கழுத்தில் அவருக்குக் காணப்படும் காயம் குணமாகுவதற்கு முன்பதாகவே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் தெரிவித்தார். அத்தோடு, பொலிஸாரே அவரது கழுத்தில் காயத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகம் காணப்படுவதாகவும், அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .