2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தப்பினார் ஸுமா

Editorial   / 2017 மே 29 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரிகள்,  நேற்று (28) சந்தித்தபோது, தனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பொன்றை தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா தோற்கடித்தார் என உள்ளூர் ஊடகமான நியூஸ்24, தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.   

தேசிய நிறைவேற்றுச் செயற்குழு தொடர்பான நேரடி அறிவைக் கொண்ட, அடையாளத்தை வெளிப்படுத்தாத தகவல் மூலங்கள் இரண்டை மேற்கோள்காட்டிய அவ்வூடகம், இரவு வரை சென்ற சூடான தேசிய நிறைவேற்றுச் செயற்குழுவின் சந்திப்பின் போதே, நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் ஸுமா தப்பித்தாகக் கூறியுள்ளது.   

தலைநகர் பிறிட்டோரியாவில், கடந்த வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமான குறித்த சந்திப்பில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும், 70க்கு மேற்பட்ட கட்சி அதிகாரிகள் விவாதத்தில் பங்கேற்றதாகவும், ஸுமாவுக்கு பெரும்பாலான பேச்சாளர்களின் ஆதரவு இருந்ததாகவும் குறித்த சந்திப்பில் பங்கேற்ற தகவல் மூலமொன்று தெரிவித்ததாக அவ்வூடகம் கூறியுள்ளது.   

இந்நிலையில், தனது பதிலளிப்பில் ஸுமா கடுமையாக இருந்ததாகவும், “நீங்கள் வெளிநாட்டு சக்திகளால் பயன்படுத்தப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் என்று கூறியதாகவும் உள்ளூர் செய்திச்” சேவையான ஐ விட்னல்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி பேசிய 72 பேரில், 18 பேர் ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் பேசியதாக, ஐ விட்னஸ் நியூஸ் கூறியுள்ளது.

மதிக்கப்படும் நிதியமைச்சர் பிரவின் கோர்ட்ஹன்னை, இவ்வாண்டு மார்ச்சில் பதவிநீக்கியமையைத் தொடர்ந்து, ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்குள்ளிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் சிவில் சமூகத்திடமிருந்தும், ஸுமா எதிர்கொள்ளும் அழுத்தம் அதிகரித்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X