2021 மே 06, வியாழக்கிழமை

ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் வான்வெளியில் பிரவேசித்ததன் காரணமாக, சிரிய எல்லையில் வைத்து ரஷ்ய தயாரிப்பு போர் விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி தெரிவித்துள்ளது. சிரியாவின் லதாக்கியா பிராந்தியத்திலுள்ள யமாடி கிராமத்திலேயே விமானம் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹதாய் மாகாணத்தில், துருக்கிய வான்பரப்பில் மேற்படி விமானம் அத்துமீறியதாகவும், ஐந்து நிமிடங்களில் பத்து தடவை எச்சரிக்கப்பட்டதாகவும் துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக,  எஸ்.யு-24 ரக தாக்குதல் விமானம் வீழ்ந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தவிர, மேற்படி விமானம், சிரிய வான்பரப்பிலேயே இருந்ததாக கண்காணிப்பு தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், யமடி கிராமத்திலுள்ள கூடாரங்கள் மீது போர் விமானம் வீழ்ந்ததாகவும், விமானிகள், விமானத்திலிருந்து பரசூட்டுடன் வெளியேறியது அவதானிக்கப்பட்டுள்ளதாக டொகன் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .