2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வடகொரியாவின் இன்னோர் அணுவாயுதச் சோதனைக்குத் தயார்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவால் மேற்கொள்ளப்படக்கூடிய இன்னுமோர் அணுவாயுதச் சோதனைக்கு, முழுமையாகத் தயாராக இருப்பதாக, தென்கொரியா அறிவித்துள்ளது.

தனது நான்காவது அணுவாயுதச் சோதனையை, இவ்வாண்டு ஜனவரியில் மேற்கொண்ட வடகொரியா, அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்நாடு மீதான அதிகபட்ச தடைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விதித்திருந்தது.

இந்நிலையிலேயே, ஐந்தாவது அணுவாயுதச் சோதனை நடத்தப்படுமாயின், அதற்கு முழுமையாகத் தயாராக இருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், புதிய ஏவுகணைச் சோதனைகளையும் அணுவாயுதச் சோதனைகளையும் மேற்கொள்ளுமாறு, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உத்தரவிட்டிருந்தார். இதற்குப் பதிலடி வழங்கும் விதமாக, இந்தத் தகவலை தென்கொரியா வெளியிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X