2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பங்களாதேஷில் தீ விபத்து; 11 பேர் பலி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  வேளையில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 11 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்தால் பலியானவர்களில் ஐந்து பெண்களும் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவுக்கு அப்பால் உள்ள குடிசைப் பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்துக் காரணமாக சுமார் 500 வீடுகள் எரிவடைந்துள்ளன.

இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இருப்பினும் சிகரெட் அல்லது நுளம்புத் திரியினால் இந்த தீ பரவியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

குறைந்த வருமானத்தை உடையவர்களே இந்த குடிசைப் பகுதியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .