2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடியில் சிதம்பரத்திற்கும் தொடர்பு: நிதின்

A.P.Mathan   / 2011 ஜூன் 08 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின்போதே அவர் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

'2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் உயரதிகாரிகள் சிலருக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. இது தொடர்பான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வைத்திருக்கிறோம். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த 2ஜி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றினை மத்திய புலனாய்வுத் துறையினரிடம் கொடுத்து இதுதொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கேட்கவிருக்கிறோம்...' என்று நிதின் குறித்த பேட்டியிலே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

'ஸ்டார் நியூர்' தொலைக்காட்சியின் அரசியல் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நிதின் மேற்படி குற்றச்சாட்டினை சிதம்பரம் மீது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • xlntgson 0776994341;0716597735 sms only Thursday, 09 June 2011 09:01 PM

    நிதின் கட்காரி அவர்களே சிதம்பர இரகசியமோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .