2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

உலக கிண்ண ரசிகர்களுக்கான HIVஆபத்து பற்றிய எச்சரிக்கை

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிகளைக் காண தென்னாபிரிக்கா சென்றவர்கள், அங்கு பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட்டிருந்தால் HIV தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

விடுமுறைக் கால பாலுறவு நடவடிக்கைகளால்தான், ஈரின சேர்க்கையாளர்களில் ஆண்களில் மூன்றில் இரண்டு வீதத்தினரும் பெண்களில் நான்கிலொரு வீதத்தினரும் HIV தொற்றை பெற்றுக்கொள்கின்றனர்.

பால்வினை நோய்கள் - HIV நிபுணரான வைத்தியர் ஸ்ரெவ் ரெய்லர், தென்னாபிரிக்காவில் இளம் வயதினரில் 5 பேரில் ஒருவர் HஈV வைரஸ் தொற்றுக்கு இலக்கானவராகக் காணப்படுவதாக கூறுகின்றார்.

" விடுமுறைக் காலத்தின் மகிழ்ச்சியான பொழுதுகளில், சூரியக் குளியல், மது நுகர்வு எனக் கட்டுப்பாடுகள் தளரும் போது பாதுகாப்பற்ற பாலுறவுக்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது" என்கிறார் பீற்றர் கிறீன்வுஸ்.

பாலியல் நோய்கள் பெரிய அளவில் பரவுவதை தடுக்க உதவுவதற்கு நேரகாலத்தோடு சோதித்துப் பார்த்தல், நோய் பரவமுன் சிகிச்சை எடுத்தல் என்பன முக்கியமானவையாகும். 25,000 உதைப்பந்தாட்ட ரசிகர்கள் தென்னாபிரிக்காவிலிருந்து திரும்பியுள்ள அதே நேரம், கோடை விடுமுறையில் பலர் வேறிடங்களுக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் நாடு திரும்பியதும் பாலியல் நோய்களுக்கான சோதனைகளை செய்வது, தூர இடங்கலில் இருக்கும் போது பாதுகாப்பு உறைகளை பயன்படுத்துவது என்பன பாராட்ட வேண்டிய நல்ல விட்யங்களென வைத்தியர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--