2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

‘அல்-கொய்தாவின் தெற்காசியத் தலைவர் கொல்லப்பட்டார்’

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள தலிபான் வளாகமொன்றின் மீதான கடந்த 23ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க-ஆப்கானிஸ்தான் இணைந்த இராணுவ நடவடிக்கையொன்றில் இந்திய துணைக் கண்டத்தின் அல்-கொய்தா தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் புலனாய்வு முகவரகமான தேசிய பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த நடவடிக்கையில் குறைந்தது 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஆசிம் உமரின் இறப்பை ஐக்கிய அமெரிக்காவும், அல்-கொய்தாவும் உறுதிப்படுத்தவில்லை.

எனினும், குறித்த செய்தியை தலிபான் மறுத்துள்ள நிலையில், எதிரியின் திரிக்கப்பட்ட பிரசாரம் என இதை மறுத்துள்ள தலிபானி பேச்சாளரொருவர், குறித்த நடவடிக்கையில் பொதுமக்களுக்கு மாத்திரமே இழப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

டுவிட்டரில் நேற்று பகரப்பட்ட அறிக்கையொன்றில், தலிபானின் பலம் வாய்ந்த முஸா குவாலா மாவட்டத்தில் ஐக்கிய அமெரிக்க-ஆப்கானிஸ்தான் நடவடிக்கை இடம்பெற்றதாகவும், அங்கு ஆசிம் உமரும் அல்-கொய்தாவின் இந்திய துணைக்கண்ட ஏனைய உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்பு நிறுவகம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .