இந்திய இராணுவத்தை குற்றஞ்சாட்டுகிறது பாகிஸ்தான்

 

காஷ்மிர் பிராந்தியத்தில் இடம்பெற்ற பரஸ்பரத் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, பாகிஸ்தான் இராணுவத்தின் வாகனத்தை இடித்துத் தள்ளியமையாலேயே, பாகிஸ்தானின் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் இராணுவத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மிரின் அத்மியூகம் பகுதியில், இந்திய இராணுவத்தினரின், யுத்த நிறுத்த மீறலுக்குப் பதிலடி கொடுக்கும் போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்போது, பாகிஸ்தான் இராணுவத்தினரின் வாகனம், நீலம் நதியில் விழுந்தமையால், அதிலிருந்து 4 பாகிஸ்தான் வீரர்கள், கொல்லப்பட்டனர் என்று, இராணுவத்தினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இதற்கான உடனடி பதில் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில், இந்தியா தரப்பில் எந்தவொரு பதிலும் கொடுக்கப்படவில்லை. எனினும், இந்தச் சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை என்று, இந்திய பாதுகாப்பு அமைச்சின் லெப்டினன் கேர்ணல் ராஜேஷ் கலியா கூறியுள்ளார்.  

இதே​பகுதியில், கடந்த நவம்பர் மாதம், இந்திய இராணுவத்தினரினால் பாகிஸ்தான் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது, அத்தாக்குதலுக்கு இலக்காகி, பயணிகள் பஸ்ஸொன்றில் பயணித்த 12 பேர் உயிரிழந்திருந்தனர். இந்தத் தாக்குதல், இந்திய இராணுவத்தால் பொறுப்பற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டது என்று, பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இ​தேவேளை, ஜம்மு-காஷ்மிர் பகுதியில், பாகிஸ்தான் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது, இராணுவ வீரர் ஒருவரும் 7 வயது சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக, இந்திய இராணுவத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.    


இந்திய இராணுவத்தை குற்றஞ்சாட்டுகிறது பாகிஸ்தான்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Loading...
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.