2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

இலங்கைத் தமிழர்களுக்கு ’இரட்டை குடியுரிமை கிடைக்காது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற, தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்கள் கோரிக்கையை, மத்திய அரசாங்கம் நிறைவேற்றப்போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,பங்களாதேஷ், திபெத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு கொடுத்த முன்னுரிமையை, தமிழர்களுக்கு தரவில்லை என்றும் குறிப்பாக திபெத்தியர்களுக்குக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது என்றும் ஆனால் இங்கிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு இருக்கையில், அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றுமா என்பது சந்தேகமே என்று கூறிய அவர், இருப்பினும் இந்த நல்ல விடயங்களை விடுத்து, தமிழகத்தை பாதிக்கும் வகையில் பல திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .