2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

’எல்லை தாண்டினால் துருக்கியின் பொருளாதாரத்தை அழிப்பேன்’

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கிழக்கு சிரியாவில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறும் தனது அதிர்ச்சிகர முடிவை அடுத்து, துருக்கி எல்லை தாண்டினால் துருக்கியில் பொருளாதாரத்தை அழிக்கப் போவதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு, குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்கா, துருக்கிக்கிடையேயான உறவுகள் மோசமான நிலையில், துருக்கியத் தயாரிப்புகள் சிலவற்றின் மீது வரிகளை ஐக்கிய அமெரிக்கா அதிகரித்திருந்ததுடன், உயர் அதிகாரிகள் மீது தடைகளையும் விதித்திருந்தது.

கோபாவேசமனா தொடர்ச்சியான டுவீட்களில் எல்லையைத் தாண்டி குர்திஷ் போராளிகள் மீது தாக்குதலொன்றை துருக்கி ஆரம்பிப்பதற்கான நகர்வை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

வட கிழக்கு சிரியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவதானது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நட்புறவாளர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை தோற்கடிப்பதில் ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய நட்புறவுப் படைகள் குர்திஷ் படைகள் ஆகும்.

சிரியா முழுவதும் 1,000 படைகளைக் கொண்டிருக்கின்ற ஐக்கிய அமெரிக்கா, எல்லையிலிருந்து இரண்டு டசின் கணக்கானோரை உள்ளெடுத்ததாக ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எல்லையிலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறுவானது முதுகில் குத்துவது என பிரதானமான குர்திஷ்களால் தலைமை தாங்கப்படும் குழு வர்ணித்துள்ள நிலையில், மேற்குறித்த நடவடிக்கையானது ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் மீள் எழுச்சியொன்றுக்கு வழிவகுப்பதுடன், குர்திஷ் படைகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் துருக்கியால் குர்திஷ் படைகள் தாக்கப்படும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, நடவடிக்கைக்கான அனைத்துத் தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு நேற்று டுவீட் செய்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .