’குற்றஞ்சாட்டப்படும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்’

தனது மனைவி பங்கெடுத்த வர்த்தகப் பிரச்சினையொன்றைத் தீர்க்க, இராணுவப் புலனாய்வு முகவர்களைப் பயன்படுத்தி, மக்களைக் கடத்தி விசாரணை செய்ததாக, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் தாரிக் அஹமட் சித்திக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என அல்ஜஸீரா இணையத்தளம் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தும் நபர்களிலொருவராக தாரிக் அஹமட் சித்திக் காணப்படுவதுடன், பிரதமர் ஷெய்க் ஹசீனாவுக்கு தனிப்பட்ட ரீதியில் மிகவும் நெருங்கியவராகக் காணப்படுகின்றார். பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் சகோதரி ஷெய்க் றெஹானைவையே தாரிக் அஹமட் சித்திக்கின் சகோதரர் மணமுடித்துள்ளார்.

பங்களாதேஷிலிருந்து தானாகவே வெளியேறி தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியும், தாரிக் அஹமட் சாதிக்கின் முன்னாள் வர்த்தகப் பங்களாருமான கேணல் ஷாகிட் உதீன் கானாலேயே, தாரிக் அஹமட் சாதிக்குக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுளன.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள தனது வர்த்தகத்தின் பணியாளர்கள் மூவர், அரச பாதுகாப்பு அதிகாரிகள் போன்று தோன்றுபவர்களால் இவ்வாண்டு ஜனவரியில் கடத்தப்பட்டதாக ஷாகிட் உதீன் கான் கூறியுள்ளார். அந்தவகையில், 12 வாரங்களுக்கு முன்னர் குறித்த நபர்கள் கடத்தப்பட்ட பின்னர் அவர்களைக் காணவோ அல்லது அவர்களைப் பற்றுக் கேள்விப்படவோ இல்லை என அவர்களின் குடும்பங்கள் அல்ஜசீராவுக்கு உறுதிப்படுத்தியுள்ளன. இதுதவிர, ஷாகீட் உதீன் கானின் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் அல்ஜசீரா பெற்றுள்ளது.

குறித்த இதே மூன்று நபர்களும் இன்னொரு பணியாளரொருவரும் தனது டாக்கா அலுவலங்களிடமிருந்து ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்டு, இராணுவ புலனாய்வு முகவரகத்தில் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டதாக ஷாகீன் உதீன் கான் மேலும் கூறியுள்ளார். தாரிக் அஹமட் சித்திக்கின் மனைவி ஷகீன் சித்திக்கால் இணைந்து உரிமப்படுத்தப்படுகின்ற புரோச்யா நிறுவனத்தை ஷாகீட் உதீன் கான் மூடிய மறுநாளே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர்கள் தாரி அஹமட் சித்திக்கின் அரசாங்க வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அங்கு வைத்து அவர்களின் அலுவலக ஆவணங்கள் இறக்கப்பட்ட பின், அவர்கள் கண்களைக் கட்டிய நிலையில், இராணுவ புலனாய்வு முகவரகத்தில் இரண்டு நாட்கள் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது தடவையாக இவர்கள் கடத்தப்பட்ட பின்னர், ஷாகீட் உதீன் கானும், அவரது மனைவியும், அவர்களுடம் பயங்கரவாதத்தில் பங்கெடுத்துள்ளதாக வழக்கொன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

 

 


’குற்றஞ்சாட்டப்படும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.