X

X

ட்ரம்பின் முடிவுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்ப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் விடுத்த அறிவிப்புக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டிலர்சன் தனது எதிர்ப்பினை  வெளியிட்டுள்ளார்.

குறித்த முடிவினால் பல பிரச்சினைகள் தோன்றும் என தாம் தொடர்ந்தும் ட்ரம்பை எச்சரித்து வந்ததாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜோன் மெட்ஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ்,இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் ப்ரைட்மென் ஆகியோர் ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க வாழ் யூத பிரஜைகள் ட்ரம்பிற்கு பலத்த ஆதரவை வழங்கிதுடன்,இவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலமை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளதாகவும், அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன.


ட்ரம்பின் முடிவுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்ப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.