Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆதரவற்றோர் இல்லத்தில் பணம் கையாடல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதான கலிதா ஜியாவுக்கு, டாக்கா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பங்களாதேஷின் பிரதமராக இருந்த கலிதா ஜியா ஆதரவற்றோருக்கான அறக்கட்டளையிலிருந்து 2,52,000 அமெரிக்க டொலர் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது டாக்கா நீதிமன்றம். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உட்பட 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
டாக்கா நீதிமன்றத்துக்கு கலிதா ஜியா அழைத்து வரப்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அவரை அழைத்து செல்லக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். அப்போது ஜியா ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, போலீஸார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் 5 போலீஸார் காயமடைந்ததாகவும் இரு மோட்டார் சைக்கிள்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .