‘ரஜினிக்கு மோடி தான் இயக்குநர்’

“ரஜினி நடிகர், மோடி இயக்குநர்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து அண்மையில் கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தை வரவேற்றார்.

இந்நிலையிலேயே, ரஜினியின் இந்த வரவேற்பை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட சீமான், “பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் புதிதாக திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா? மோடி சொல்வது ரஜினிக்கு மட்டுமே புரிகிறது. பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையை ரஜினி வரவேற்றிருக்கிறார். ரஜினி நடிகர்; மோடி இயக்குநர். இயக்குநர் சொல்வதை நடிகர் கேட்டுத்தான் ஆக வேண்டும். ரஜினிக்கு சொந்தமாக சிந்திக்க மூளை இல்லை" என்று கூறினார்

 


‘ரஜினிக்கு மோடி தான் இயக்குநர்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.