2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஊரெழு றோயல்ஸ், பாடும்மீன் அணிகள் வெற்றி.

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                            (கு.சுரேன்)
யாழ்ப்பாண கால்பந்தாட்ட லீக் தமது அங்கத்துவ விசேட எட்டு அணிகளுக்கிடையில் நடத்தும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் நேற்றைய போட்டியில் ஊரெழு றோயல்ஸ், பாடும்மீன் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில நடைபெறும் இப்போட்டியின் நேற்றைய போட்டியில் ஊரெழு நோயல்ஸ் அணியும் நாவாந்துறை சென் நீக்கிலஸ் அணியும் மோதிக்கொண்டன.

ஆட்டம் முடியும் வரையும் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாதததினால் சமநிலை தவிர்ப்பு உதைக்கு போட்டி கொண்டு செல்லப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் ஊரெழு றோயல்ஸ் அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து பாiஷயூர் சென்.அன்ரனீஸ் அணி மோதியது. இப்போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் வென்றது.

மேற்படி சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று சனிக்கிழமை; உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளன. முதலாவது அரையிறுதியில் ஊரெழு நோயல்ஸ் அணியை எதிர்த்து பாiஷயூர் சென்.அன்ரனீஸ் அணியும், இரண்டாவது அரையிறுதியில் குருநகர் பாடும்மீன் அணியினை எதிர்த்து நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியும் மோதவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .