கூடைப்பந்தாட்டத்தில் சம்பியனானது வேம்படி அணி

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தால் நடத்தப்பட்ட, இளையோருக்கான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில், 15 வயதுப்பிரிவு பெண்கள் பிரிவில், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டி, கடந்த ஒரு மாதகாலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்தது. இதில் 10 அணிகள் பங்குபற்றின. 15 வயதுப் பெண்களுக்கான இறுதிப்போட்டியில், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணியும், உடுவில் மகளிர் கல்லூரி அணியும் மோதின. இந்தப் போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.

இதில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி, 35-30 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று, சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டியின் தொடர் நாயகியாக அரிச்சந்திரன் மதுரா, இறுதிப் போட்டியின் நாயகியாக குகனேஸ்வரன் திசோதா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற அணிகள், மற்றும் சிறந்த வீர, வீராங்கனைகளுக்கான பரிசில்களை, வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வழங்கினார். 

  • jay Wednesday, 09 August 2017 04:20 AM

    It' s gd that girls are performing.

    Reply : 0       0


கூடைப்பந்தாட்டத்தில் சம்பியனானது வேம்படி அணி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.