2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் நாளை ஆரம்பமாகின்றது

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

தமிழர் கால்பந்தாட்ட பேரவை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது பருவகால வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் நாளை ஆரம்பமாகவுள்ளது.

அந்தவகையில், இத்தொடருக்கான கிண்ண அறிமுகமும், தொடர் தொடர்பான விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடும் யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்நிலையில், இத்தொடர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஜஸ்வர் உமர்,

“வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 12 கழகங்களை உள்ளடக்கியதாக இத்தொடர் நடைபெறவுள்ளதுடன், லீக் சுற்றுக்களாக 60 போட்டிகளும், ஏழு விலகல் முறையான போட்டிகளும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏழு மைதானங்களில் நடைபெறவுள்ளது.

மேலும், இத்தொடருக்கான பரிசுத்தொகையாக சம்பியனாகும் அணிக்கு 50 இலட்சமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 25 இலட்சமும், மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிகளுக்கு முறையே 10 இலட்சமும், ஐந்து இலட்சமும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வீரா்கள் இத்தொடர்களில் பங்குகொண்டு விளையாடுவதன் மூலம் தமது திறமைகளை சர்வதேச அளவில் வெளிக்கொணர முடியும்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .