2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

வேகமாக வளர்ந்து வரும் சுக்போல் விளையாட்டு

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

1970 ஆண்டு சுவிஸ் நாட்டில் டொக்டர் ஹெர்மன் ப்ராண்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுக்போல் விளையாட்டை இன்று தாய்வான் நாடு சர்வதேச அளவில் முன்னெடுத்து வருவதோடு தாய்வானின் தேசிய விளையாட்டாகவும் காணப்படுகின்றது.

உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் விளையாட்டாக சுக்போல் விளங்குகின்றது. அரை நூற்றாண்டு கூட இல்லாத ஒரு குறுகிய வரலாற்றைக் கொண்ட சுக்போல், தற்போது உலகம் முழுவதும் 70 நாடுகளில் விளையாடப்படுகிறது. இது பல விளையாட்டுகளில் இருந்து பல முக்கிய திறன்களை உள்ளடக்கிய ஒரு விளையாட்டு என விளையாட்டு பயிற்றிவிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2015ம் ஆண்டளவில் இலங்கையில் சுக்போல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்றளவில் இலங்கை விளையாட்டு வீரர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த ஒரு விளையாட்டாக மாறயுள்ளது. எனவே சுக்போல் இலங்கையில் மற்றொரு தடம் பதித்துள்ளது. ஒரு முழு நாள் பயிற்சி திட்டத்தை சர்வதேச சுக்பால் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2019 ஜூலை 27யன்று தெஹிவல புட்சல் கிளப்பில் இலங்கை சுக்போல் சங்கம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலுமிருந்து 50க்கும் மேற்பட்ட புதியவர்களின் பங்கேற்புடன், பயிற்சி அமர்வானது அடிப்படை நடைமுறை திறன்கள், விளையாட்டிற்கான உத்திகள், உடற்பயிற்சித் திறன்கள், வீரர்களின் மனப்பாங்கினை வளர்த்தல், போன்ற விடயங்களத் தழுவி நடைமுறைப் பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முன்னாள் தேசிய நீச்சல் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜூலியன் போலிங், சிரேஷ்ட விடையாட்டு ஊடகவியலாளர் அமந்த விஜேசூரிய, மற்றும் பயிற்றிவிப்பாளரும் ஊக்குவிப்பானருமான ரம்ஸி சைன்டீன் ஆகியோர்; பயிற்றிவிப்பாளர்களின் பங்களிப்பு, நம்பிக்கை மற்றும் விளையாட்டினூடாக சமாதானத்தை வளர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டன.

இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் பல இனத்தவர்களையும் சேர்ந்தவர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். 

இலங்கையின் சுக்போல் சங்கத்தின் தலைவராக ஜெனதன் விஸேசிங்க தனது கடமையினை சிறப்பாக நிறைவேற்றி வருவதோடு தெற்காசிய சுக்போல் சங்கத்தின் தலைவராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுக்போல் விளையாட்டு தொடர்டபாகவும் விளையாட ஆர்வமுள்ளவர்களும் TchoukballSL@gmail.com  என்ற மின்னஞ்சல் மற்றும் 0761787621, 775558951  ஆகிய அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .