வெள்ளிக்கிழமை, 18 மே 2012

நல்லூர் முருகனுக்கு இன்று கார்த்திகைத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவில் இன்று 17 ஆம் திருவிழா. கார்த்திகைத் திருவிழா.

முருகப் பெருமானுக்கு உகந்தநாள் கார்த்திகைத் திருநாளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத் திதியில் மட்டுமன்றி ஒவ்வொரு மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நன்நாள்களிலும் முருகப் பெருமானுக்கு விசேட தீபாராதனைகள் இடம்பெறுவது வழமை.

திருவிழாக் காலத்தில் வருடாந்தம் வரும் இந்தக் கார்த்திகை நட்சத்திர நன்னாள் விசேட திருவிழாவாக வெகுவிமரிசையாக இடம்பெறுவது வழமை.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமான் வந்துதித்தான் என்றும் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்த காரணத்தால் கார்த்திகேயன் என்ற பெயர் முருகனுக்கு உண்டு என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

இன்றைய 17ஆம் திருவிழாவில் நல்லூர் கந்தன் வீதி உல வருவதனை படங்களில் காணலாம்.

Views: 1183

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.