அதிசயம் ஆனால் உண்மை : இணைய இணைப்பில்லாதபோது மாத்திரம் இயங்கும் 'ரஜினி' இணையத்தளம்
24-01-2012 06:05 AM
Comments - 8       Views - 4476

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தின் பெயரில் புதிய இணையத்தளமொன்றை உருவாக்கியுள்ளார். இது சாதாரண இணையத்தளம் அல்ல, இணைய இணைப்பு இல்லாதநிலையில் இயங்கும் உலகின் முதலாவது இணையத்தளம் இதுவாகும்.

'ரஜினி சக்தியில்'; இந்த இணையத்தளம் இயங்குகிறது என்கிறார் அதன் வடிவமைப்பாளர்.

allaboutrajni.com  (ஓல் எபௌட் ரஜினி) என இந்த இணையத்தளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இணையத்தளப் பக்கத்திற்கு சென்றபின் அதன் உள்ளே செல்வதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. நமது கணினியுடனான இணைய இணைப்பை அகற்றிவிடுவதுதான் அது.

இணைய இணைப்பை நீக்கியபின் வேறெந்த இணையத்தளங்களையும்   நாம் பார்வையிட முடியாது. ஆனால் ரஜினியின் இந்த இணையத்தளத்தை மாத்திரம் பார்வையிடலாம்.

ஆங்கில மொழிமூலமான இந்த இணையத்தளத்தில் ரஜினிகாந்த் குறித்த குறிப்புகள் வேடிக்கை தகவல்கள், (நம்பமுடியாத கற்பனைக் கதைகளும்)   முதலானவை உண்டு. Desimartini.com எனும் இணையத்தளத்தின் ஓர் அங்கமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தில் உலாவிக் கொண்டிருக்கும்போது வேறு தேவைகளுக்காக நாம் இணைய இணைப்பு மீண்டும் ஏற்படுத்தினால் இந்த ரஜினி இணையத்தளம் உடனே இயங்காமல் விட்டுவிடும். 'ஐயோ, இது எதிர்பாராதது. தொடர்ந்தும் உலாவுவதற்கு இணைய இணைப்பை அகற்றவும்' என அறிவுறுத்தல் வருகிறது.

வேறு யாராலும் செய்ய முடியாது சாகசங்களை ரஜினிகாந்த் செய்யக்கூடியவர் என்பதால் அவரின் பெயரில் முற்றிலும் வித்தியாசனமா இணையத்தளமொன்றை வடிவமைக்கத் தீர்மானித்தோம். அதனால் இணைய இணைப்பில்லாமல் இயங்கும் இந்த இணையத்தளத்தை உருவாக்கினோம் என இதனை வடிவமைத்த குர்பாக்ஸ் சிங் கூறியுள்ளார்.

விசேட ரஜினி இணையத்ளத்திற்கான இணைப்பு

"அதிசயம் ஆனால் உண்மை : இணைய இணைப்பில்லாதபோது மாத்திரம் இயங்கும் 'ரஜினி' இணையத்தளம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (8)
Sathis Kumar 24-01-2012 08:09 PM
சூப்பர் சூப்பர் ஸ்டார் வெப் சைட்ஸ் சூப்பர்.
Reply .
0
0
Kethis 24-01-2012 09:35 PM
ஆச்சரியம் ஆனால் உண்மை
Reply .
0
0
siraj 27-01-2012 06:46 PM
எப்படியோ அவருக்கு லாபம் தான்
Reply .
0
0
Muneer 29-01-2012 01:48 PM
இன்னும் மக்கள் மடமையிலேயே இருக்கிறார்கள்.
Reply .
0
0
மாணவன் 01-02-2012 01:34 PM
இது ஒன்றும் அதிசயம் இல்லை, ஏனையவர்களின் தொழிநுட்ப அறியாமையை இலாபகரமாக பயன்படுத்தி இருக்கிறார், இதனை தயாரித்தவர். ActionScript3 இலே கிடைக்கின்ற ServiceMonitor Class (இதன் மூலம் internet connection கிடைக்கிறதா இல்லையா என்பதை அறிய முடியும்) ஐ பயன்படுத்தி ஒரு flash application இல் connection கிடைத்தால் ஒரு குறிப்பிட்ட கட்டளையும், கிடைக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட கட்டளையையும் செயற்படுமாறு செய்ய முடியும். இதனைத்தான் இங்கே செய்திருக்கிறார்கள்.
Reply .
0
0
chefshanthi 11-02-2012 10:06 PM
குட் jock
Reply .
0
0
feenix 23-02-2012 07:52 PM
ரஜினி சார்க்கு எனது மரியாதை, ஆனால் இது அப்பட்டமான பொய். இன்னும் மக்கள் ஏமாற அவர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை. இது வெறும் வெப் பக்கமே தவிர, ஒரு இணைய தளம் இல்லை....
Reply .
0
0
சுகுமாரன் 04-03-2012 02:37 PM
சினிமாவில் ரஜினி மக்களை முட்டாள்களாக்கி சாதனைகள் செய்கிறார் என்றால் இணையம் பெயரில் இவர்கள் மற்றையோரை முட்டாளாக்குகிறார்கள்.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty